செய்திகள்

'நம் வாழ்க்கையில நிறைய விஷயங்கள் நடக்கும்...'' - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு இளையராஜா அறிவுரை

12th Apr 2022 03:50 PM

ADVERTISEMENT

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று (ஏப்ரல் 11) இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தார். இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். 

அவரது பதிவில், என்னுடைய திங்கள்கிழமை மதியம் இசையுடன் கழிந்தது. என் இனிய இளையராஜாவுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சிகரமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் வொர்க் மோட் என குறிப்பிட்டுள்ளதால் ஐஸ்வர்யாவின் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. 

இதையும் படிக்க | அமிதாப் பேரன், ஸ்ரீதேவியின் மகள் நடிக்கும் இணையத் தொடரை இயக்கும் ஆர்யன் கான்

ADVERTISEMENT

இந்த நிலையில் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு பதிலளித்துள்ளார். அதில், உன்னை சந்தித்ததிலும், உன்னுடன் நேரம் செலவிட்டதிலும் எனக்கு மகிழ்ச்சி. 

ஒருவரின் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடக்கும். ஆனால் ஒன்று மற்றும் மாறாது. அது உண்மையான காதல். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இரு. எல்லாமே மாறும். ஆனால் ஒன்று மட்டும் மாறாது. அது காதல். என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT