செய்திகள்

மிரட்டலான தோற்றத்தில் நடிகர் சதீஷ்: 'சட்டம் என் கையில்' போஸ்டர் வெளியீடு

9th Apr 2022 08:03 PM

ADVERTISEMENT

நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகி வரும் சட்டம் என் கையில் திரைப்பட போஸ்டரை நடிகர் சிலம்பரசன் சனிக்கிழமை வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். முன்னதாக நாயகனாக அறிமுகமான நாய் சேகர் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சதீஷின் அடுத்த படத்தின் அறிவிப்பு சனிக்கிழமை வெளியானது.

இதையும் படிக்க | ‘காதலும் அடிமைத்தனத்துல இருந்து உலகத்த விடுவிக்கும்’: கதிர் திரைப்பட டிரைலர் வெளியீடு

சட்டம் என் கையில் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை சாச்சி இயக்குகிறார். முத்தைய ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை நடிகர் சிலம்பரசன் சனிக்கிழமை வெளியிட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT