செய்திகள்

விஜயகாந்த் நடிப்பதை உறுதிசெய்த இயக்குநர்: உற்சாகத்தில் ரசிகர்கள்

5th Apr 2022 03:50 PM

ADVERTISEMENT

 

நடிகர் விஜய்யின் 'பிரியமுடன்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் விஜய் மில்டன். பின்னர் 'தோஸ்த்', 'நெஞ்சினிலே', 'சாமுராய்' 'ஆட்டோகிராஃப்', 'காதல்' உள்ளிட்ட பல படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார். 

'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலி சோடா', 'கடுகு', '10 எண்றதுக்குள்ள' போன்ற சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை இயக்கிவருகிறார். 

இதையும் படிக்க | 'பீஸ்ட்' படத்துக்கு குவைத்தில் தடை ? வெளியான அதிர்ச்சி காரணம்

ADVERTISEMENT

 

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜயகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தத் தகவலை பிரேமலதா விஜயகாந்த் மறுத்திருந்தார். 

இந்த நிலையில் விஜய் மில்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜயகாந்த் இருப்பதாகவும், அவரது வேடம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT