செய்திகள்

அடுத்த படத்துக்கும் யுவன்தான் இசையா? : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

4th Apr 2022 12:45 PM

ADVERTISEMENT

 

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' படம் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் யுவனின் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில் விஷால் அடுத்ததாக 'லத்தி' என்ற படத்தில் போலீஸாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இதையும் படிக்க | இரவு விருந்தில் போதைப் பொருள்: விஜய் சேதுபதி பட நாயகி கைது

ADVERTISEMENT

இதுகுறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என்னுடைய திரையுலக வாழ்வில் யுவனுடன் 12வது முறை இணையவிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய நல்ல நண்பரும்  லிட்டில் மேஸ்ட்ரோவாகிய யுவனை லத்தி படக் குழு சார்பாக வரவேற்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

லத்தி படத்தை பிரபல நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து ராணா பட நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளனர். ஆர்.வினோத் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT