செய்திகள்

வெளியானது 'பீஸ்ட்' அரபிக் குத்து தெலுங்கு மற்றும் ஹிந்தி பாடல்

4th Apr 2022 04:26 PM

ADVERTISEMENT

 

பீஸ்ட் படத்திலிருந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி அரபிக் குத்து பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் பாடல் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தப் பாடலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரசிகர்களை  கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், அரபிக் குத்து பாடல் பீஸ்ட் படத்துக்கு அந்தந்த மொழிகளில் நல்ல அடையாளத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க | விஜய்க்காக களமிறங்கும் பிரபல ஹிந்தி நடிகர்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

ADVERTISEMENT

இந்த நிலையில் ஹிந்தி டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் வருண் தவான் வெளியிடுகிறார். மேலும் தெலுங்கு டிரெய்லர் நாளை (ஏப்ரல் 5) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 

நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்கு பிறகு சன் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவரை இயக்குநர் நெல்சன் பேட்டி காண்கிறார். தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT