செய்திகள்

''கனவுகள் நிஜமாகும்...'': வெங்கட் பிரபுவுடன் 12 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளைப் பகிர்ந்த அசோக் செல்வன்

DIN

'மாநாடு' படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள 'மன்மத லீலை' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசைமைத்துள்ளார். 

விமர்சகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், 2010-ல் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், தற்போது மன்மதலீலை படத்தில் வெங்கட் பிரபுவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து அசோக் செல்வன் தெரிவித்துள்ளதாவது, ''கடந்த 2010ல் நான் உதவி புகைப்பட கலைஞராக பணிபுரிந்துவந்தேன். என்னுடைய பாஸ் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் படப்பிடிப்பு இருப்பதாக சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் 'சென்னை 28' படம் பார்த்ததில் இருந்து அவரது ரசிகன். படப்பிடிப்புக்கு எனக்கு மிக விருப்பமான வெள்ளை சட்டைடைய அணிந்து சென்றேன். 

அந்த ஒரு நாள் தான் சீக்கிரமே பணிக்கு சென்றேன். வெள்ளை பற்கள் பளிச்சிட நிற்கும் என்னை புகைப்படத்தில் நீங்கள் பார்க்கமுடியும். நான் அப்படித்தான் படப்பிடிப்பு முழுவதும் இருந்தேன். ரிஃப்லெக்டரை படித்திருக்கும்போது கூட நான் அந்த ரிஃப்லெக்டருக்கு சவாலாக இருந்திருப்பேன். அப்போது இவருடன் ஒருநாள் பணிபுரிவேன் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். 

இப்பொழுது 2022. சரியாக 12 ஆண்டுகளுக்கு பிறகு மன்மத லீலை படத்துக்காக அவருடன் பணிபுரிந்தேன். கனவுகள் நிஜமாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT