செய்திகள்

அன்றே கணித்த சூர்யா : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 'சிங்கம் 2' பட நடிகர் கைது: சிக்கியது எப்படி ?

30th Sep 2021 12:30 PM

ADVERTISEMENT

 

சூர்யாவின் சிங்கம் 2 பட நடிகர் செக்வூம் மால்வின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள கே.ஜி.ஹள்ளி என்ற பகுதியில் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் போதைப் பொருள்கள் விற்பனை செய்துவருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையும் படிக்க | தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர் ? : பரவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

ADVERTISEMENT

இந்த நிலையில் அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த நைஜிரியாவைச் சேர்ந்த செக்வூம் மால்வின் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கல்லூரி மாணவர்களுக்கும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் போதைப் பொருட்கள் விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள், அவர் பயன்படுத்திய கைப்பேசி ஆகியவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றினர். 

கைதான செக்வூம் மால்வின், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் 2 படத்தில் போதைப் பொருள் கடத்துபவராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் அன்றே கணித்தார் சூர்யா என்ற ஹேஷ்டேக்குடன் இந்த செய்தியை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். 


 

Tags : Singam 2 Suriya Drug Chekuwame Malwin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT