செய்திகள்

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை: கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர்

30th Sep 2021 04:52 PM

ADVERTISEMENT

 

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா, ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். இவர் 2 கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். 

இந்த நிலையில் சௌஜன்யா பெங்களூருவில் உள்ள கும்பல்கோடு பகுதியில் இருக்கும் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் கதவை உடைத்து சௌஜன்யாவின் உடலை மீட்டுள்ளனர். 

ADVERTISEMENT

மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது நண்பர்கள், உடன் நடித்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்னறனர். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் எழுதிய கடிதம் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளது. 

அந்தக் கடிதத்தில் தனது தற்கொலைக்கு வேறு யாரும் பொறுப்பல்ல என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தற்கொலை முடிவெடுத்ததற்காக தன் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும் அவருக்கு மன ரீதியான பிரச்னைகள் இருந்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

(எந்தவொரு பிரச்னைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால்,  044 2464 0050 அல்லது 104 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம். )

Tags : Soujanya TV Serial Suicide
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT