செய்திகள்

இன்ஸ்டகிராமில் நேரலையில் உரையாடவுள்ள இசையமைப்பாளர் அனிருத்

30th Sep 2021 03:40 PM

ADVERTISEMENT

 

செப்டம்பர் 30, 2021

இந்த நாளை 2021-ம் ஆண்டின் படைப்பாளி தினமாகக் கொண்டாடுகின்றன பிரபல சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக்கும் இன்ஸ்டகிராமும்.

இதையடுத்து இணையம் வழியாகப் பல நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகின்றன. 

ADVERTISEMENT

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான அனிருத், 2021 படைப்பாளி தினத்துக்காக இன்ஸ்டராமில் நேரலையில் உரையாடவுள்ளார்.

இன்றிரவு (செப். 30) 9 மணிக்கு நேரலையில் உரையாடவிருக்கிறேன் என இன்ஸ்டகிராமில் அனிருத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறியதாவது: இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் படைப்பாளி தினத்தன்று தமிழ்நாட்டில் உள்ள திறமைசாலிகள், வருங்கால படைப்பாளிகளுடன் நேரலையில் உரையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். என்னைப் போன்ற கலைஞர்கள் தங்களை வெளிப்படுத்தவும் ரசனையில் ஒரே அலைவரிசை கொண்டவர்களுடன் இணையவும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டகிராமும் உதவுகின்றன என்றார். 

 

Tags : Anirudh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT