செய்திகள்

''என்னை மன்னித்துவிடுங்கள்'': ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக நடிகர் அதிர்ச்சித் தகவல்

24th Sep 2021 11:03 AM

ADVERTISEMENT

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக வெங்கட் ரங்கநாதன் அறிவித்துள்ளார். 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் ரோஜாவின் அம்மா செண்பகம் குறித்த சம்பவங்களால் பரபரப்பு கூடியுள்ளது. 

இந்தத் தொடரில் அர்ஜூனின் தம்பியாக அஸ்வின் என்ற வேடத்தில் வெங்கட் ரங்கநாதன் நடித்து வந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற வேடத்தில் நடித்து வருகிறார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், நான் ரோஜா தொடரில் இருந்து விலகுகிறேன். உங்களுக்கு ஏமாற்றமளித்ததற்கு என்னை மன்னியுங்கள். என்னை ஜீவாவாக தொடர்ந்து பார்க்கலாம். இதுவரை எனக்கு அதரவளித்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

என்ன காரணத்தினால் ரோஜா தொடரில் இருந்து அவர் விலகுகிறார் என்று அவர் அந்தப் பதவில் குறிப்பிடவில்லை. ஒரே நேரத்தில் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் நடிப்பதால் நேரமின்மை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் அல்லது விஜய் டிவி கொடுத்த நெருக்கடியின் காரணமாக அவர் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்று பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
 

Tags : Pandian Stores Vijay TV Sun TV Roja Venkat Venkat Ranganathan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT