செய்திகள்

சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயன் 'டாக்டர்' பட முன்னோட்டம் : எப்பொழுது தெரியுமா ?

24th Sep 2021 05:50 PM

ADVERTISEMENT

 

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட முன்னோட்டம் சன் டிவி யூடியூப் தளத்தில் நாளை மாலை வெளியாகவிருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள படம் டாக்டர். இந்தப் படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

இதையும் படிக்க | யோகி பாபுவுக்கு நன்றி சொன்ன மறைந்த நடிகர் விவேக்கின் மகள்: ரசிகர்கள் நெகிழ்ச்சி

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்தப் படத்தின் முன்னோட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்டம் நாளை (சனிக்கிழமை) 5 மணிக்கு சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, நடிகர் வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களல் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

Tags : Anirudh Sivakarthikeyan Doctor Nelson Dhilipkumar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT