செய்திகள்

உன் அருகாமை மட்டும் போதுமானதாக இல்லை: பிரியா பவானி சங்கர் எழுதிய கவிதை

24th Sep 2021 12:45 PM

ADVERTISEMENT


நடிகை பிரியா பவானி சங்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார். 

செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். அந்தத் தொடருக்கு கிடைத்த வரவேற்பால் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாயப்பைப் பெற்றார். 

அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த, 'கடைகுட்டி சிங்கம்', 'மான்ஸ்டர்' படங்கள் வெற்றி பெறவே அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து 'பொம்மை', அருண் விஜய்யுடன் இணைந்து 'யானை', ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'ஓ மணப்பெண்ணே', சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து 'பத்துத் தல', தனுஷூடன் இணைந்து 'திருச்சிற்றம்பலம்' போன்ற படங்கள் அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. 

சமூக வலைதளங்களில் அவரது பதிவுகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. இந்த நிலையில் அவர் சமீபத்தில் நிலவின் புகைப்படத்துடன் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், அவ்வளவு இருட்டில் உன் அருகாமை மட்டும் போதுமானதாக இல்லை. இன்னும் வேண்டும் என்ற என் பேராசை, பெருநிலவின் வெளிச்சத்தையும் சேர்த்துக்கொண்டு வளர்கிறது.

ADVERTISEMENT

தனிமையில் உன் மார்பில் முகம்புதைத்து கரைய புதிய கவலைகள் எதுவும் இல்லை என்னிடம். இன்று உன்னுள் புதைக்க இந்த முகத்தில் புன்னகை மட்டுமே இருக்கிறது. வேறெந்த வார்த்தையும் தேவையில்லை. உன் கண்களில் நீ நினைத்த நொடியே பார்த்துவிட்டேன். என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags : Twitter Priya Bhavani Shankar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT