செய்திகள்

கப்பல் படைத் தளபதியான ஜேம்ஸ் பாண்ட் நாயகன்

24th Sep 2021 12:08 PM

ADVERTISEMENT

உலகத் திரை வரலாற்றில் பல தொடர்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தை விட ‘ஜேம்ஸ் பாண்ட்’ திரைப்படங்களுக்கு உருவான  வரவேற்பு அதிகம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகர்கள் மாறிக்கொண்டே வந்தாலும் கடந்த 2006 ஆண்டு ’கேசினோ ராயல்’ படம் மூலம் ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமான டேனியல் கிராய்க் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார். அதன்பின் அதே வரிசையில் குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய நான்கு படங்களில் இதுவரை நடித்திருக்கிறார்.

இதையும் படிக்க | ''விஜய் பயந்து விட்டார், அவர் மத்திய அரசை விமரிசிக்காததற்கு காரணம்...'' - பிரபல தயாரிப்பாளர் அதிரடி

தற்போது அக்-8 அன்று வெளியாகும்  ‘நோ டைம் டு டை’ படமே தான் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என அவர் அறிவித்திருந்த நிலையில் டேனியல் கிராய்க்கை கவுரவிக்கும் விதமாக இங்கிலாந்து அரசு அவரை கப்பல் படைத்தளபதியாக நியமித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து  ஜேம்ஸ் பாண்ட் டிவிட்டர் பக்கத்தில், ’கவுரவ கப்பல் படைத்தளபதி  பதவி தனக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது’ என டேனியல் தெரிவித்ததாக அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

 

Tags : James Bond
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT