செய்திகள்

பிரபல ஹிந்தி கதாநாயகனுடன் இணையும் விஜய் சேதுபதி !

23rd Sep 2021 05:27 PM

ADVERTISEMENT


ஃபேமிலி மேன் இயக்குநருடன் விஜய் சேதுபதி இணையும் இணையத் தொடருக்கு ஃபேக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த மாதம் மட்டும் துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி ஆகிய 3 படங்கள் வெளியாகின. மூன்று படங்களுமே அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தன. 

தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஃபேமிலி மேன் இணையத் தொடரை இயக்கிய டிகே மற்றும் ராஜ் இணைந்து உருவாக்கும் புதிய இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

ADVERTISEMENT

இந்தத் தொடரில் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, ரெஜினா கேசன்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்புத் தளத்தில் நடிகை ரெஜினாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே தங்களது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த இணையத் தொடருக்கு ஃபேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Tags : Regina Cassendra Vijay Sethupathi Shahid Kapoor Raashi Khanna Fakes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT