செய்திகள்

''ச்சீ என்றார்கள்'' - தன் படத்துக்கு கிடைத்த விமரிசனம் குறித்து வெங்கட் பிரபு வருத்தம்

DIN

கோவா படத்தில் திருங்கையாக நடித்த நடிகர் சம்பத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையென இயக்குநர் வெங்கட் பிரபு வருத்தம் தெரிவித்துள்ளார். 

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வருடம் வெளியான  பாவக் கதைகள் என்ற இணையத் தொடர் விமரிசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் இடம் பெற்ற 4 படங்களை, 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர். 

அதில் 'தங்கம்' என்ற படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இந்தத் தொடரில் காளிதாஸ் ஜெயராம், ஷாந்தனு, ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் திருநங்கையாக சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

சமீபத்தில் ஒரு விருது விழாவில் இவரது நடிப்பைப் பாராட்டி, சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதனைப் பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, இப்பொழுது உள்ள விமரிசகர்கள் போல கோவா திரைப்படம் வெளியான போது இருந்திருக்க வேண்டும்.

'கோவா' படத்தில் நடித்ததற்காக சம்பத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் யாராலும் பாராட்டப்படவில்லை. ஆனால் அவரது வேடத்துக்கு விமரிசகர்கள் ச்சீ என்று சொன்னார்கள். உங்களுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி காளிதாஸ் ஜெயராம் என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT