செய்திகள்

அடுத்த விவேகமா வலிமை? ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

23rd Sep 2021 07:48 PM

ADVERTISEMENT


அஜித்தின் வலிமை படம் அவர் நடிப்பில் 2017-இல் வெளியான விவேகம் படத்தின் அடுத்த பாகம் என ட்விட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகின்றன.

போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. இதன் கிளிம்ப்ஸ் விடியோ இன்று (வியாழக்கிழமை) மாலை வெளியிடப்பட்டன. இந்த விடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

எனினும், இந்த விடியோவில் வரும் ஒரு பைக் காட்சி, விவேகம் படத்தை நினைவுபடுத்துவதாகவும், இது அதன் அடுத்த பாகம் எனவும் ட்விட்டரில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இதனால், விவேகம் 2.0 எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

விவேகம் படத்தைப் போலவே இன்று வெளியான வலிமை காட்சிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் நடக்கின்றன. அஜித்தின் வலிமை தோற்றமும், ஏறத்தாழ விவேகம் படத் தோற்றத்துடன் ஒத்துப்போவது இந்த ஒப்பீட்டுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

ADVERTISEMENT

Tags : valimai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT