செய்திகள்

சைமா: சூரரைப் போற்று படத்துக்கு ஏழு விருதுகள்!

DIN

ஹைதராபாத்தில் நடைபெற்ற தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விருதுகள் என்கிற சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஏழு விருதுகள் கிடைத்துள்ளன. 

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் கடந்த வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்தார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி. படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான சிம்ப்ளி ஃப்ளையைத் தழுவி எடுக்கப்பட்டது.  சினிமா தகவல்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற இணையத்தளம் ஐஎம்டிபி. இதில் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற 1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரைப் போற்று படம் 3-ம் இடம் பிடித்து சாதனை செய்தது.

இந்நிலையில் தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விருதுகள் என்கிற சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்தியாவின் பிரபல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார்கள். 2020, 2021 என இரு ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. சைமா 2020-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் அசுரன், கைதி படங்களுக்குப் பல விருதுகள் கிடைத்துள்ளன. சைமா 2021 விருதுகளில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஏழு விருதுகள் கிடைத்துள்ளன.

2020 விருதுகளில் சிறந்த படமாக கைதி தேர்வாகியுள்ளது. சிறந்த இயக்குநராக வெற்றிமாறனும் சிறந்த நடிகர்களாக கார்த்தி, தனுஷும் சிறந்த நடிகைகளாக நயன்தாராவும் மஞ்சு வாரியரும் தேர்வாகியுள்ளார்கள். சிறந்த இசையமைப்பாளராக இமானும் சிறந்த நகைச்சுவை நடிகராக யோகி பாபுவும் தேர்வாகியுள்ளார்கள்.

2021 விருதுகளில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர், சிறந்த ஒளிப்பதிவாளர் என ஏழு விருதுகள் சூரரைப் போற்று படத்துக்குக் கிடைத்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT