செய்திகள்

நன்றாக வளர்ந்துவிட்ட மீனா மகள் நைனிகா - வெளியான புகைப்படம்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்

DIN

நடிகை மீனா தனது மகள் நைனிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. 

அட்லி இயக்கத்தில் விஜய் கதாநாயகனா நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தெறி. இந்தப் படத்தில் மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேய அனைவரையும் கவர்ந்தார். 

இதனையடுத்து அவர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்தார். நடிகை மீனாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை மீனா தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நைனிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தெறி படம் வெளியாகி 5 வருடங்கள் தான் ஆகிறது. இந்த 5 வருடங்களில் நைனிகா நன்றாக வளர்ந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீதேவி விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமாரின் மாலிகா உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT