செய்திகள்

2.5 கோடி பார்வையாளர்களைக் கடந்த 'நாங்க வேற மாறி' பாடல்

14th Sep 2021 02:50 PM

ADVERTISEMENT

போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை.  இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் முதல் பாடல் கடந்த ஆகஸ்ட்-3 ஆம் தேதி யூடியூபில் சோனி மியூசிக் பக்கத்தில் வெளியானது .

இதையும் படிக்க | 25 ஆண்டுகளுக்குப் பின் மலையாளத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் !

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் , விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவான " நாங்க வேற மாறி " என்கிற இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அடைந்திருந்த நிலையில் தற்போது  2.5 கோடி பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

முன்னதாக அதிவேகமாக 10 லட்சம் விருப்பங்களை பெற்றும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும் இந்தாண்டு தீபாவளி அன்று படத்தை திரையரங்கில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது . 

Tags : valimai Ajith Yuvan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT