செய்திகள்

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா, ஸ்ரீஜேஷ்

DIN

சோனி தொலைக்காட்சியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் 13-ம் பருவம் கடந்த மாதம் ஆரம்பித்தது. கோன் பனேகா குரோர்பதி 13 நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் மீண்டும் தொகுத்து வழங்குகிறார்.

கோன் பனேகா குரோர்பதி என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் மூன்று பருவங்கள் 2000 முதல் 2007 வரை ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2010 முதல் சோனி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பருவத்திலிருந்து இன்று வரை (3-வது பருவம் தவிர, அப்பகுதியை ஷாருக் கான் தொகுத்து வழங்கினார்) இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் செப்டம்பர் 17 அன்று சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஷான்தார் சுக்ரவார் என்கிற பகுதியில் பிரபல விளையாட்டு வீரர்களான நீரஜ் சோப்ராவும் ஸ்ரீஜேஷும் கலந்து கொள்கிறார்கள். 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் மோதிய இந்தியா சிறப்பாக விளையாடி 5-4 என ஆட்டத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இதையடுத்து 41 வருடங்களுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பராகச் சிறப்பாகப் பங்காற்றினார் ஸ்ரீஜேஷ்.

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ராவும் ஸ்ரீஜேஷும் அமிதாப் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதோடு தங்களுடைய டோக்கியோ ஒலிம்பிக்ஸ் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT