செய்திகள்

சந்தானம் படத்தில் இடம்பெற்ற மைக்கேல் மதன காமராஜன் படப் பாடல்: விடியோ

14th Sep 2021 02:13 PM

ADVERTISEMENT

 

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான படம் - டிக்கிலோனா. சமீபத்தில் ஜீ5 ஓடிடியில் வெளியான இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா. சந்தானம், யோகி பாபு, அனகா, ஷிரின் போன்றோர் நடித்துள்ளார்கள்.

1990-ல் கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற, பேர் வைச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல், டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

இப்பாடலின் விடியோ சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியானது. இதுவரை கிட்டத்தட்ட 50 லட்சம் பார்வைகள் இந்த விடியோவுக்குக் கிடைத்துள்ளன. 

ADVERTISEMENT

Tags : Dikkiloona Ilaiyaraaja
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT