செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் - கௌதம் மேனன் இணையும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

12th Sep 2021 02:28 PM

ADVERTISEMENT


ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் இணைந்து நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இயக்குநர் கௌதம் மேனனுடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் செல்ஃபி. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றி மாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்குகிறார். 

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக 96 படப் புகழ் வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார்.

ADVERTISEMENT

மேலும் வாகை சந்திரசேகர், தங்கதுறை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதன் முறையாக ஒரு நடிகராக தாணுவுடன் இணைந்து பணி புரிவதில் மகிழ்ச்சி. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT