செய்திகள்

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' படங்களில் என்ன ஒற்றுமை? - இயக்குநர் லோகேஷை வியக்க வைத்த ரசிகர்

11th Sep 2021 05:11 PM

ADVERTISEMENT

 

'மாநகரம்', 'கைகி', 'மாஸ்டர்' படங்களின் ஒற்றுமை குறித்த கேள்வி எழுப்பிய ரசிகருக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். 

'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் வெளியான முதல் படத்திலேயே பிரம்மிப்பை ஏற்படுத்தினார். 

இரண்டாவது படமான கைதியில், ஒரே இரவில் நடைபெறும் கதையை, எந்தக் குழப்பமும் இல்லாமல் படு சுவாரஸியமாக சொல்லி கவனம் ஈர்த்தார். அதற்கு கிடைத்த பலன் தான் மாஸ்டர். தனது அசாத்தியமான திறமையால் மூன்றாவது படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் அளவுக்கு முன்னேறினார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பகிரங்கமாக மேடையில் போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

இயக்குநர் லோகேஷின் சிறப்பு என்னவென்றால், வழக்கத்துக்கு மாறான கதையை, அனைவரும் ரசிக்கும்படி சொல்வது தான். தற்போது ஒரே படத்தில் இந்தியாவின் சிறந்த கலைஞர்களான கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் ஆகியோரை விக்ரம் படத்துக்காக இயக்கிக்கொண்டிருக்கிறார். 

இந்த நிலையில் ரசிகர் ஒருவர், மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் போஸ்டரைப் பகிர்ந்து, மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு இயக்குநர் லோகேஷ், என்னவா இருக்கும் ? என்று கேள்வி எழுப்பினார். 

மூன்று படங்களுமே கமல் படங்களை முன்னுதாரணமாகக் கொண்டு உருவானது என்றும், மாநகரம் படத்தில் சந்தீப் பேருந்தில் இருந்து குதிப்பார், கைதி படத்தில் கார்த்தி லாரியில் இருந்து குதிப்பார், மாஸ்டர் படத்தில் விஜய் ஆட்டோவில் இருந்து குதிப்பார் என நகைச்சுவையாக பதிலளித்து வருகின்றனர். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT