செய்திகள்

விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் மஹான் : இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

8th Sep 2021 05:48 PM

ADVERTISEMENT

 

விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் மஹான் படத்தின் துருவ் வேட போஸ்டர் ரீல் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து மஹான் படத்தில் நடித்து வருகின்றனர்.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இநத்ப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. நடிகை வாணி போஜன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து நடிகர் விக்ரமின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு துருவ் வேடத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  துருவின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதைக் காண ரசிகர்களிடேயே ஆர்வம் எழுந்துள்ளது. 

Tags : Dhruv Vikram Mahaan Karthik Subbaraj Santhosh Narayanan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT