செய்திகள்

அண்ணாத்த முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் நாள் ? - கசிந்த தகவல்

8th Sep 2021 10:45 AM

ADVERTISEMENT


நடிகர் ரஜினிகாந்த்திண் அண்ணாத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல் பரவிவருகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வருகிற செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

இயக்குநர் சிவா தனது படங்களில் நடிகர்களின் பெயரிலோ, பாடல்களிலோ விநாயகரைக் குறிப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். வீரம் படத்தில் அஜித்தின் பெயர் விநாயகம், வேதாளம் படத்தில் வீர விநாயகா பாடல் என சில உதாரணங்களைச் சொல்லலாம். இதன் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியாகலாம் என்பது ரசிகர்களின் கருத்து. 

ADVERTISEMENT

மேலும் ஓடிடி குறித்த தகவல்களைப் பகிரும், லெட்ஸ் ஓடிடி குளோபல் என்ற ட்விட்டர் பக்கம், ''அண்ணாத்த முதல் பார்வை வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும்'' என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags : Rajinikanth Annatthe Annaatthe Nayanthara D.Imman Sun Pictures
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT