செய்திகள்

பிரபல இயக்குநருக்கு திருமணம்: சிவகார்த்திகேயன், சதிஷ் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்பு

2nd Sep 2021 05:23 PM

ADVERTISEMENT

 

பிரபல இயக்குநர் சச்சியின் திருமண விழாவில் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

வைபவ் கதாநாயகனாக நடித்த 'சிக்ஸர்' திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை இயக்கியவர் சச்சி. 'சிக்ஸர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் இயக்குநர் சச்சிக்கும், மருத்துவரான சரண்யா என்பவருக்கும் நேற்று(புதன்கிழமை) திருமணம் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

திருமண நிகழ்வில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதிஷ், மிர்ச்சி சிவா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ரித்விகா, வெண்பா, கேபிஒய் தீனா, குக் வித் கோமாளி பாலா, டைகர் தங்கதுரை என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷ் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 

Tags : Sivakarthikeyan marriage Chachi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT