செய்திகள்

கதிர் திரைப்பட டீசர் வெளியீடு

2nd Sep 2021 07:59 PM

ADVERTISEMENT

துவாரகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் தினேஷ் இயக்கியுள்ள கதிர் திரைப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

துவாரகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கதிர். இயக்குநர் தினேஷ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன.

இதையும் படிக்க | ரசிகர்களே ரெடியா? நாளை வெளியாகிறது 'மணி ஹெய்ஸ்ட்'

நாயகனாக வெங்கடேஷ் நடித்துள்ளார். நடிகை பாவ்யா த்ரிகா நாயகியாக அறிமுகமாகியுள்ளார். புதுமுகங்கள் பலரும் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் சந்தோஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ADVERTISEMENT

ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசரை வியாழக்கிழமை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இதையும் படிக்க | இளையராஜாவுடன் இணையும் இயக்குநர் பா.ரஞ்சித்?

மாறுபட்ட வகையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags : கதிர் Kathir movie
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT