செய்திகள்

கிறிஸ்தவர்கள் குறித்து தவறான கருத்து? : 'ருத்ர தாண்டவம்' படத்துக்கு தடை கோரி புகார்

2nd Sep 2021 02:36 PM

ADVERTISEMENT

 

கிறிஸ்துவர்கள் குறித்து தவறான கருத்து இடம் பெற்றிருப்பதாகவும், அதனால் ருத்ர தாண்டவம் படத்தைத் தடை செய்யக் கோரியும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, இயக்குநர் கௌதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'ருத்ர தாண்டவம்'. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்கள் 'ருத்ர தாண்டவம்' படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT

மேலும், மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ள ருத்ர தாண்டவம் படத்தைத் தடை செய்வதோடு, இயக்குநர் மோகன் ஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'திரௌபதி' படத்தைப் போலவே, 'ருத்ர தாண்டவம்' பட முன்னோட்டம் வெளியான போது, அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் கூறப்பட்டன. தற்போது இந்தப் புகார் காரணமாக இந்தப் படம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. 

Tags : Rudra Thandavam Mohan G Richard Rishi Gautham Menon Darsha Gupta
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT