செய்திகள்

'பிரேமம்' பட இயக்குநர் படத்தில் பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் நயன்தாரா

2nd Sep 2021 11:59 AM

ADVERTISEMENT

 

'நெற்றிக்கண்' படத்துக்குப் பிறகு நயன்தாராவுடன் இணைந்து மீண்டும் 'பிரேமம்' பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் படத்தில் அஜ்மல் நடிக்கவிருக்கிறார்.

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருந்த 'நெற்றிக்கண்' திரைப்படம் கடந்த மாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித் தளத்தில் வெளியாகியிருந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்தில் நயன்தாரவின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்தப் படத்தில் வில்லனாக அஜ்மல் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பிரேமம்' பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ADVERTISEMENT

பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அஜ்மல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சமந்தா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் 'தர்பார்' படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து 'அண்ணாத்த' படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT