செய்திகள்

பிக் பாஸ் பட்டம் வென்ற பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்

2nd Sep 2021 12:18 PM

ADVERTISEMENT

 

பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 40.

ஹிந்தி பிக் பாஸ் 13-ம் பருவ நிகழ்ச்சியை வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா. ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா, இரு படங்களில் நடித்துள்ளார். 2008-ல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2014-ல் பாலிவுட்டில் அறிமுகமானார். 

இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் மரணமடைந்துள்ளார் சித்தார்த் சுக்லா. அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சித்தார்த் சுக்லாவுக்கு தாயும் இரு சகோதரிகளும் உள்ளார்கள். 

ADVERTISEMENT

சித்தார்த் சுக்லாவின் மரணத்துக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
 

Tags : Actor Sidharth Shukla
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT