செய்திகள்

தனது புதிய படத்தை அறிவித்த 'பிக்பாஸ்' அனிதா சம்பத் ! யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா ?

30th Oct 2021 06:51 PM

ADVERTISEMENT

 

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பிரபலானவர் அனிதா சம்பத். அவருக்கென ரசிகர் பட்டாளம் உருவாகியது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை பின் தொடரத் துவங்கினர். 

மேலும் காப்பான் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மிகவும் புகழ்பெறத் துவங்கினார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார். 

இதையும் படிக்க | சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இருந்து வெளியான 'சோ பேபி' பாடல் விடியோ

ADVERTISEMENT

இந்த நிலையில் அவர் ரௌடி பேபி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்க, அவருடன் சத்யராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

ராஜா சரவணன் என்பவர் இயக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, செல்லதுரை ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT