செய்திகள்

வெளியானது பிரபாஸின் ராதே ஷ்யாம் பட டீசர் !

23rd Oct 2021 02:26 PM

ADVERTISEMENT


பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் பட டீசர் வெளியாகியுள்ளது. 

பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் தயாரிக்க ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வருகிற பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சீனா மற்றும் ஜப்பானீஸ் மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று (23/10/21) பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ஏற்றுள்ள விக்ரமாதித்யா வேடத்தை விளக்கும் விதமாக டீஸர் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க | உதயநிதி ஸ்டாலினை திடீரென சந்தித்த 'வலிமை' தயாரிப்பாளர்

ADVERTISEMENT

ராதே ஷ்யாம் படத்தில் சச்சின் கடேகர், பிரியதர்ஷி, பாக்யஸ்ரீ,  ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, குனால் ராய் கபூர், ரிதி குமார், ஷாஷா செத்திரி, சத்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். மனோஜ் பரமஹம்சா தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு தற்போது ஒளிப்பதிவு செய்து வருகிறார். ராதே ஷ்யாம் படத்துக்கு தமிழ் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 

 

Tags : Prabhas Pooja Hegde Radhe Shyam Justin Prabakaran
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT