செய்திகள்

இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் 'கூழாங்கல்' : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

23rd Oct 2021 03:20 PM

ADVERTISEMENT

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பாக சிறந்த படமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது வழக்கம். இந்தியா சார்பில் சில படங்கள் பரிந்துரைக்கப்பட்டு அதில் ஒரு படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும். 

இந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா சார்பில் 14 படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. தமிழ் சினிமா சாரிபில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்துள்ள கூழாங்கல் மற்றும் யோகி பாபு நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் விஜய் டிவியில் வெளியான மண்டேலா ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. 

இதையும் படிக்க | வெளியானது பிரபாஸின் ராதே ஷ்யாம் பட டீசர் !

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு கூழாங்கல் திரைப்படம் அனுப்பப்படவுள்ளது. இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆஸ்கர் விருது.... இதைக் கேட்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. வாழ்நாள் கனவு மெய்படும் தருணத்துக்கு இரண்டு அடி தள்ளியிருக்கிறோம். என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை குவித்து வருகிறது.  

Tags : Koozhangal Oscar Vignesh Shivan Nayanthara Yuvan Shankar Raja
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT