செய்திகள்

கவினுக்கு ஜோடியாக நடிப்பதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகுகிறாரா முல்லை ?

22nd Oct 2021 04:37 PM

ADVERTISEMENT

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடிக்கும் காவ்யா, கவினுக்கு ஜோடியாக ஊர் குருவி படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவிவருகிறது. 

கவின் மற்றும் பிகில் அம்ரிதா இணைந்து நடித்த லிஃப்ட் திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் அந்தப் படம் குறித்து கவினுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க | விவாகரத்து சர்ச்சை: அவதூறு வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தா - ரசிகர்கள் அதிர்ச்சி

ADVERTISEMENT

இந்தப் படத்தையடுத்து ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தயாரிக்கும் ஊர் குருவி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்
படத்தை அருண் கே இயக்கவிருக்கிறார். இந்தப் படம் உண்மை சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்து வரும் காவ்யா நடிக்கவிருப்பதாகவும், அதனால் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகப்போவதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து காவ்யா விலகவில்லையாம்.  ஒரே நேரத்தில் படத்தில் நடித்துக்கொண்டே சீரியலிலும் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

Tags : Oor Kuruvi Kavin Pandian Stores Lift Vignesh Shivan Nayanthara
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT