செய்திகள்

ஒளிப்பதிவாளரின் உயிரைப் பறித்த சினிமா துப்பாக்கி: இயக்குநர் படுகாயம்

22nd Oct 2021 12:11 PM

ADVERTISEMENT

 

சினிமா துப்பாக்கியால் ஒளிப்பதிவாளரை நடிகர் சுட்டுக்கொன்ற சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் சான்டா ஃபே கவுண்டி என்ற இடத்தில் நேற்று (அக்டோபர் 21) ரஸ்ட் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்திருக்கிறது. சரியாக மதியம் 1 மணி 50 நிமிடத்தின்போது நடிகர் அலேஸ் பால்ட்வின் சினிமா துப்பாக்கியால் சுட்டதில் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மரணமடைந்தார். இயக்குநர் ஜோயல் சூசா படுகாயமடைந்தார். 

இதையும் படிக்க | ஹரிஷ் கல்யாண் - பிரியா பவானி ஷங்கரின் ஓ மணப்பெண்ணே ! - திரைப்பட விமர்சனம்

நடிகர் அலேஸ் பால்டாவின் ஏன் துப்பாக்கியால் சுட்டார் அங்கே என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி சூடானது காட்சி படமாக்கப்பட்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

தற்போது படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் பணியாளர்களிடம் எப்படி இருவரும் சுடப்பட்டனர்? எந்தவிதமான துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவருகிறோம் என்றும் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 

Tags : Alec Baldwin Halyna Hutchins Joel Souza Prop Gun
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT