செய்திகள்

'கிராமி' விருதுகளுக்குச் சென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை!

21st Oct 2021 12:39 PM

ADVERTISEMENT

சர்வதேச விருதுகளில் ஒன்றான ‘கிராமி’ விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான மிமி திரைப்படத்தின் பாடல்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது.

லக்‌ஷ்மண் உடேகர் இயக்கத்தில் க்ரீதி சனோன், பங்கஜ் த்ரிபாதி, சாய் தம்ஹான்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான ’மிமி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியானது. பின்  இப்படம் விமர்சகர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதையும் படிக்க | நாளை(அக்.22) வெளியாகிறது 'ஓ மணப்பெண்ணே’

முக்கியமாக படத்தின் கரு அதிகமும் விவாதிக்கப்பட்டதோடு படத்தில் இடம்பெற்ற ‘பரம சுந்தரி’பாடல் இந்தியா முழுவதும் தொடர்ந்து ரசிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் ‘மிமி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை 64-வது ‘கிராமி’ விருதுகளுக்கு அனுப்புவதாக ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே ரஹ்மான் சர்வதேச அளவில் 2 ஆஸ்கர் விருது , 2 கிராமி விருது , கோல்டன் குளோப் விருது , ஃபாப்தா விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT