செய்திகள்

'இவரு உலகை ஆளப்போறவரு மாதிரி இருக்காரு' - பிரபல கதாநாயகனை புகழ்ந்து தள்ளிய மாதவன் : ஏன் தெரியுமா ?

21st Oct 2021 06:30 PM

ADVERTISEMENT

 

விக்ரம் வேதா படப்பிடிப்பில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பு குறித்து நடிகர் மாதவன் புகழ்ந்து பேசியுள்ளார். 

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. 

இந்தப் படத்தை தமிழில் தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம், டி சீரிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து ஹிந்தியில் தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தில் மாதவன் வேடத்தில் சயிஃப் அலிகானும், விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் மாதவனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, விக்ரம் வேதா ஹிந்தி படப்பிடிப்பிற்கு யார் வந்திருக்கிறார் பாருங்கள் என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த மாதவன், இந்தப் படத்துக்காக நீங்கள் செய்ததைப் பார்த்து வியப்படைந்தேன். ஹிருத்திக் ரோஷன் பார்ப்பதற்கு இந்த உலகை ஆள்பவர் போல் தெரிகிறார். என்ன ஒரு தோற்றம் மற்றும் உடல்மொழி. இந்தப் படம் வரலாற்றில் இடம் பிடிக்கும் என்று இப்பொழுதே எழுதப்பட்டுவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT