செய்திகள்

''முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்'': டி.ராஜேந்தர் அறிவிப்பு

20th Oct 2021 06:31 PM

ADVERTISEMENT

 

மாநாடு படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 

முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட மாநாடு திரைப்படத்தின் வெளியீடு நவம்பர் 25க்கு தள்ளிப்போனது. இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் தான் நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்புக்காக சிம்பு தற்போது மும்பை சென்றுவிட்டார். 

 

ADVERTISEMENT

இதையும் படிக்க | அனிருத் பாடலுக்கு 'பாக்கியலட்சுமி' ராதிகா போடும் 'செம டான்ஸ்': கூட ஆடுறது யாரு தெரியுதா ?

இந்த நிலையில், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநாடு படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் நடப்பு தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தினர் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். என்றார். 

அண்ணாத்த படத்துடன் வந்தால் மாநாடு படத்தின் வசூல் பாதிக்கக்கூடும் என்பதாலேயே தயாரிப்பாளர் இத்தகைய முடிவை எடுத்திருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது டி.ராஜேந்தர் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

Tags : Maanaadu Venkat Prabhu STR Simbu Yuvan Shankar Raja T.Rajender
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT