செய்திகள்

சூர்யாவின் 'ஜெய் பீம்' பட டிரெய்லர் குறித்து வெளியான தகவல்

20th Oct 2021 02:17 PM

ADVERTISEMENT

 

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து சிறப்பு வேடத்தில் நடித்துள்ள படம் ஜெய்பீம். ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதையும் படிக்க | மகள் மனைவியுடன் பிக்பாஸ் இமான் அண்ணாச்சி: புகைப்படம் வைரல்

ADVERTISEMENT

இந்தப் படத்தின் டீசர், மற்றும் பவர் என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tags : Jyothika Suriya Sean Rolden Jai Bhim
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT