செய்திகள்

இதெல்லாம் கேமராவில் பதிவு செய்கிறீர்களா ? : கோபமான ஸ்ருதி - பிக்பாஸில் என்ன நடக்கிறது ?

20th Oct 2021 01:08 PM

ADVERTISEMENT

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. ப்ரமோவில் கேமரா முன்பு பேசும் ஸ்ருதி, வீட்டில் எல்லோரும் தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார்கள். கேமராவில் பதிவு செய்கிறீர்களா இல்லையா என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார். 

மற்றொரு பக்கம் பிரியங்கா, மற்றவர் மீது கருத்தை திணிக்க முயற்சிப்பது தவறு என்று சொல்ல, குறுக்கிடும் அபிஷேக், அது என்னுடைய பலம் என ஆக்ரோஷமாக சொல்கிறார். அவருக்கு பதிலளிக்கும் வருண், அதை நான் தடுப்பேன். என்னை கேள்வி கேட்க கூடாது என்கிறார். அதனை ஆமோதிக்கும் விதமாக இப்படியெல்லாம் இந்த வீட்டில் நடக்கிறது. தெரிந்துகொள்ளுங்கள் என்கிறார் பிரியங்கா. 

இதையும் படிக்க | மகள் மனைவியுடன் பிக்பாஸ் இமான் அண்ணாச்சி: புகைப்படம் வைரல்

ADVERTISEMENT

மேலும் முதல் ப்ரமோவிலும், பேசும் அபிஷேக் உங்களுடன் வாக்குவாதம் செய்தால் தான் என் முகம் தொலைக்காட்சியில் தெரியும் என்கிறார். இது மிகவும் கேவலமான எண்ணம் என இமான் சொல்ல, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் என எதிர்த்து பேசுகிறார். அபிஷேக் மட்டுமே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியாக புரிந்துகொண்டு விளையாடுவதாக அவருக்கு ஆதரவாகவும், அவர் மிக திமிராக நடந்துகொள்வதாக எதிர்ப்பும் உருவாகி வருகிறது.   
 

Tags : Bigg Boss Kamal Haasan Priyanka Imman Annachi Abishek Raja
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT