செய்திகள்

சிம்புவின் மாநாடு படம் வெளியாவதில் சிக்கல் ? : பரபரப்பு தகவல்

16th Oct 2021 12:13 PM

ADVERTISEMENT

 

கொரியன் படமான 'ஏ டே' படத்தின் தழுவலாக 'மாநாடு' படம் உருவாகியுள்ளதாக கூறப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் மெகரசைலா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இதையும் படிக்க | மறைந்த நடிகர் விவேக்கிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆர்யா

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்தப் படம் காலத்தை மாற்றக் கூடியதாக சொல்லப்படும் டைம் லூப் என்ற வகையில் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இந்தப் படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ஏ டே' படத்தின் தழுவல் என்ற சர்ச்சை உருவாகியுள்ளது. 

மேலும் ஏ டே படக்குழுவினர் மாநாடு தயாரிப்பாளருக்கு விளக்கம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவிவருகிறது. இதன் காரணமாக மாநாடு படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தத் தகவல் வதந்தியாகவும் இருக்கலாம். 

Tags : Maanaadu STR Simbu Venkat Prabhu Yuvan Shankar Raja
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT