செய்திகள்

ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' : சும்மா சரவெடி தான் : சன் பிக்சர்ஸின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்

16th Oct 2021 11:26 AM

ADVERTISEMENT

 

ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் தணிக்கை சான்றிதழ் விவரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் டீசர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கும் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தின் தணிக்கை சான்றிதழ் விவரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனையடுத்து அண்ணாத்த திரைப்படம் குடும்பத்துடன் காணக்கூடிய வைகயில் அமைந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | உடன்பிறப்பே! மினிமம் கியாரண்டி சசிகுமார் - ஜோதிகா படம் - திரை விமர்சனம்

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். டி.இமான் இசையில் இந்தப் படத்தில் இருந்து எஸ்.பி.பி பாடிய அண்ணாத்த மற்றும் சாரைக் காற்றே பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

Tags : Rajinikanth Annaatthe Annaatthe Teaser Nayanthara Keerthy Suresh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT