செய்திகள்

கேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் தேர்வு

16th Oct 2021 07:51 PM

ADVERTISEMENT

2020ஆம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

வெள்ளம் திரைப்படத்தில் நடித்த ஜெயசூர்யா சிறந்த நடிகருக்கான விருதையும், கப்பெல்லா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை அன்னாபென்னுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ''அஜித் என்னை நம்பினார், ஆனால்... '' - 'வலிமை' படம் குறித்து பிரபல நடிகர் தகவல்

இந்திய சமூகத்தில் இல்லறப் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளைக் குறித்து பேசிய தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'எம்ஜிஆர் மட்டும் இல்லையென்றால்...'' - பிக்பாஸில் நடிகர் வருண் உருக்கம்

சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை கப்பெல்லா திரைப்படத்தை இயக்கிய முஸ்தப்பாவிற்கு வழங்கப்படுகிறது. சிறந்த வெகுஜன சினிமாவிற்கான விருது அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

Tags : Cinema kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT