செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இன்றிலிருந்து மாற்றத்தைக் காணப்போகிறீர்கள்? : வெளியான ப்ரமோவில் கமல்ஹாசன் தகவல்

16th Oct 2021 02:45 PM

ADVERTISEMENT

 

மக்கள் அளித்திருக்கும் வாக்குகள் பிக்பாஸ் வீட்டில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது இன்றிலிருந்து நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என கமல்ஹாசன் தெரிவித்தார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவில் பேசும் கமல்ஹாசன், ''போட்டியாளர்கள் கடந்து வந்த பாதையைும், அவர்களின் கதையையும் நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். 

இதையும் படிக்க | 'நெஞ்சுக்கு நீதி' : உதயநிதி ஸ்டாலின் - அருண்ராஜா காமராஜ் படத்தின் மோசன் போஸ்டர் இதோ

ADVERTISEMENT

இந்த வீட்டில் இருந்து 15 பேர் நாமினேட் செயப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் அளித்திருக்கும் வாக்குகள் இந்த வீட்டில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை இன்றிலிருந்து பார்க்கப்போகிறீர்கள்'' என்று தெரிவிக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டிருக்கும் போட்டியாளர்களில் காப்பாற்றப்படுபவர்களின் விவரம் இன்று தெரிந்துவிடும். அதனைத் தான் அவர் அப்படி சொல்கிறார். 

இந்த நிலையில் அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு மற்றும் அபினய் ஆகிய மூவருக்கும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்த மூவரில் சின்னப்பொண்ணு வெளியேறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 


 

Tags : Kamal Haasan Bigg Boss Vijay TV
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT