செய்திகள்

'சமந்தாவை விமரிசித்து ட்வீட் செய்தேனா?' : நடிகர் சித்தார்த் அதிரடி பதில்

9th Oct 2021 04:27 PM

ADVERTISEMENT

 

நாக சைதன்யா - சமந்தா விவாகரத்தை விமரிசித்து ட்வீட் செய்ததாக எழுந்த சர்ச்சை குறித்து நடிகர் சித்தார்த் பதிலளித்துள்ளார்.

நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரியவிருப்பதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தனர். இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இருவரது பிரிவுக்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. 

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், என்னைப் பற்றிய உங்களது உணர்வுப்பூர்வமான அக்கறை என்னை வியப்படையச் செய்துள்ளது. என்னைப் பற்றிய தவறான செய்திகள், கதைகள் பரவியபோது நீங்கள் என் மீது காட்டிய அக்கறைக்கும், ஆதரவுக்கும் நன்றி.

ADVERTISEMENT

எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு என்றார்கள். குழந்தை பெற்றுக்கொள்ள நான் சம்மதிக்கவில்லை என்றார்கள். சந்தர்ப்பவாதி என்றார்கள். இப்பொழுது நான் கர்ப்பத்தை கலைத்துவிட்டதாக கூறுகிறார்கள். விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து தனியாக மீண்டு வர அனுமதியுங்கள். ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எந்தவிதமான வதந்திகளும் என்னை காயப்படுத்த முடியாது. என்று கூறியிருந்தார். 

திரைப்பட விமரிசனம் | தப்பித்தாரா சிவகார்த்திகேயன்? : 'டாக்டர்' - திரைப்பட விமரிசனம்

முன்னதாக சமந்தா விவகாரத்து அறிவித்தபொழுது நடிகர் சித்தார்த், ஏமாற்றுக்காரர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் என்ற கருத்து சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடிகை சமந்தாவை விமரிசித்து தான் சித்தார்த் இவ்விதமாக பதவிட்டதாக சர்ச்சை எழுந்தது. ஏனெனில் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொள்வதற்கு முன் சமந்தாவும் சித்தார்த்தும் காதலில் இருந்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை சித்தார்த் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த சித்தார்த், நான் அன்று வாழ்க்கை குறித்து இயக்குநர் அஜய் பூபதியிடம் பேசிக்கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் நடந்தது பற்றி ட்வீட் செய்திருந்தேன். எங்களுக்கு வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்கள் பற்றி பிரச்னை இருந்தது. நான் அதுகுறித்து ட்வீட் செய்திருந்தேன். இதனை வேறுவிதமாக புரிந்துகொண்டால் நான் பொறுப்பாக முடியுமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT