செய்திகள்

'ருத்ர தாண்டவம்' படத்துக்கு 3 நாள்களில் இத்தனை கோடி வசூலா ?: வெளியான தகவல்

4th Oct 2021 03:57 PM

ADVERTISEMENT

 

ருத்ர தாண்டவம் படத்தின் 3 நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

திரௌபதி படத்துக்குப் பிறகு மோகன்.ஜி மற்றும் ரிச்சர்டு ரிஷி கூட்டணி இணைந்துள்ள படம் ருத்ர தாண்டவம். இந்தப் படத்தில் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக  தர்ஷா குப்தா நடிக்க, இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக மிரட்டினார். 

மேலும் ராதாரவி, தம்பி ராமையா, தீபா, காக்கா முட்டை விக்னேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஜுபின் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகியிருந்த இந்தப் படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

ADVERTISEMENT

இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்குகளுக்குப் படையெடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் இந்தப் படம் 3 நாள்களில் ரூ.7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரௌபதி படத்தைத் தொடர்ந்து இந்தப் படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இயக்குநர் மோகன்.ஜி மகிழ்ச்சியில் உள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT