செய்திகள்

’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

4th Oct 2021 11:12 AM

ADVERTISEMENT

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்திருக்கிறது.

இதையும் படிக்க | பிக்பாஸ் முதல் நாள் : நடிகர் ராஜூ ஜெயமோகனுக்கு தொகுப்பாளர் பிரியங்கா கொடுத்த பதிலடி : வெளியான ப்ரமோ

1920 -களில் இருந்த அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற இப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிச் சென்றபடியே இருந்த நிலையில் இப்படம் அடுத்தாண்டு (2022) , ஜனவரி 7-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இப்படத்தில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT