செய்திகள்

''ஏமாற்றுபவர்கள்...'' - சமந்தாவை விமரிசிக்கிறாரா முன்னாள் காதலர் சித்தார்த்? வலுக்கும் எதிர்ப்பு

4th Oct 2021 03:07 PM

ADVERTISEMENT

 

நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து குறித்து நடிகர் சித்தார்த் மறைமுகமாக விமரிசித்துள்ளதாக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை மாற்றி வெறும் எஸ் என்ற எழுத்தை மட்டும் பெயராக வைத்திருந்தார். இதனையடுத்து நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரியவிருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவியது. 

இந்தத் தகவலை நாக சைதன்யாவும், சமந்தாவும் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் உறுதி செய்தனர். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பிரபலங்கள் பலரும் இவர்களது பிரிவு குறித்து வருத்தம் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | நாக சைதன்யா - சமந்தா விவாகரத்துக்கு ஆமிர் கான் காரணமா? நடிகை கங்கனா கடும் விமரிசனம்

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் பள்ளி ஆசிரியரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம், ஏமாற்றுபவர்கள் முன்னேறமாட்டார்கள் என்பது தான். உங்களது முதல் பாடம் ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து தான் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்துகொள்வதற்கு முன், சித்தார்த்தும் சமந்தாவும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. முன்னதாக சமந்தாவுடன் பிரிவு ஏற்பட்டபோது, நாகூர் பிரியாணி உளூந்தூர்பேட்டையில இருக்குற ஒரு தெரு நாயிற்கு கிடைக்கும் என்று எழுதியிருந்தால் அதனை யாராலும் மாற்ற முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். இதனையும் ரசிகர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT