செய்திகள்

பிகில் தயாரிப்பாளர்களுடன் இணையும் 'கோமாளி' பட இயக்குநர்: கதாநாயகன் அறிவிப்பு

4th Oct 2021 12:11 PM

ADVERTISEMENT

 

'பிகில்' தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் அடுத்ததாக தயாரிக்கும் படத்துக்கு கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். 

'பிகில்' படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படத்தில் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா ஆகியோர் நடித்துள்ளனர். 'நாய் சேகர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

ADVERTISEMENT

இதனையடுத்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தை 'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். இந்தப் படத்தில் இயக்குநர் பிரதீப் கதாநயாகனும் நடிக்கிறார். 

இதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்தப் படத்துக்காக நிறைய கதைகள் கேட்டோம். இறுதியாக இந்தக் கதையை முடிவு செய்தோம். இயக்குநர் பிரதீப்பை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT