செய்திகள்

சிவகார்த்திகேயனின் 'டான்' பட வெளியீடு குறித்து கசிந்த தகவல்

30th Nov 2021 07:09 PM

ADVERTISEMENT

 

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்துள்ளார். கல்லூரி பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இருவரும் ஒரு சில காட்சிகளில் பள்ளி மாணவர்களாக நடித்துள்ளனராம். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், ஆர்ஜே விஜய், ஷிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிக்க | அனிருத் இசையில் பிரபல நடிகரின் படத்தில் பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ADVERTISEMENT

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைக்கா நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறதாம். இதனையடுத்து இந்தப் படத்தின் பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : Sivakarthikeyan Don Anirudh Priyanka Mohan SJ Suryah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT